நிறைமாத கர்ப்பிணி பட்டினி சாவு.. கரோனா ஊரடங்கால் அரங்கேறிய சோகம்.!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்த வைரஸின் அச்சம் காரணமாக, மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு  அமலாகியுள்ளது. இதனால் தினம் பணியாற்றி வந்த தினக் கூலிகள் அனைவரும் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில், இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானிலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானிலும்  ஊரடங்கு உத்தரவு அமலாகியுள்ள நிலையில், சாப்பிட கூட வழியில்லாமல் கர்ப்பிணிப்பெண் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் மேற்கு மாவட்டத்தில் இருக்கும் நபர் பக்ஸ். இவரது மனைவியின் பெயர் சுக்ரா பிபி (வயது 30). இவர்களுக்கு 6 குழந்தைகள் உள்ள நிலையில், சுக்ரா பிபி மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். 

இந்த நிலையில், ஏழ்மையில் இருந்தாலும் தினக்கூலிக்கு சென்று வந்த அல்லாஹ், தனது குழந்தைகள் மற்றும் மனைவியுடன் சந்தோஷமாக இருந்து வந்துள்ளார். காரோனா வைரஸின் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலாகியுள்ள காரணத்தால், பணிக்கு செல்ல இயலாமல் வீட்டிலேயே அல்லா தவித்து வந்துள்ளார். 

மேலும், ஒரு வேளை உணவுக்குக் கூட சாப்பிட முடியாமல் இந்த குடும்பம் கொடூரத்தின் உச்சத்தில் பரிதவித்து உள்ளது. இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக சுப்ரா பிபி சாப்பாடு இல்லாமல் பட்டினி கிடந்துவந்துள்ளார். இதனால் இவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

நிறைமாத கர்ப்பிணி பெண் பரிதாபமாக இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும், அவரது உடலை அடக்கம் செய்ய பணம் இல்லாமல் தவித்து வந்த குடும்பத்தினருக்கு உள்ளூர் மக்கள் பணம் திரட்டி கொடுத்து உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். இந்த பட்டினி சாவு குறித்து சிந்து மாகாண அரசு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan pregnant girl died due to no food corona curfew


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->