ஐ.எம்.எப் கடனுக்காக கடுமையான நிபந்தனைகள் விதித்தால் ஏற்க தயார் - பாகிஸ்தான் பிரதமர் - Seithipunal
Seithipunal


பொருளாதார நெருக்கடியால் மிகவும் அவதிப்பட்டு வந்த பாகிஸ்தானில், கடந்த ஜூன் மாதம் பெய்த கனமழையால் நாட்டில் மூன்றில் ஒரு பகுதி வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் அத்தியாவசிய பொருட்களான தானியங்கள் மற்றும் உணவுப் பொருட்களின் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும் நாடு முழுவதும் கடும் உணவு தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இதனால் அரபு நாடுகள் மற்றும் பன்னாட்டு நிதி மையங்கள் பொருளாதார வகையில் பாகிஸ்தானுக்கு உதவி வருகின்றன. இந்நிலையில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், பன்னாட்டு நிதி அமைப்பான ஐ.எம்.எப் கடன் வழங்குவதற்கு கடுமையான நிபந்தனைகள் விதித்தால் அதை ஏற்க தயார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பாகிஸ்தான் கசப்பு மருந்தை ஏற்க தயார் எனவும், உணவு தட்டுப்பாட்டை சமாளிக்க நிதி உதவி அவசியம் எனவும் தெரிவித்துள்ளார். இந்த கடன் தொடர்பாக ஐ.எம்.எப் மேலாண்மை இயக்குனருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan pm says ready to accept severe conditions for IMF loan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->