ரஷ்யாவிடமிருந்து கடனாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அதிகாரிகள் பேச்சு வார்த்தை.! - Seithipunal
Seithipunal


அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு, பணம் வீக்கம் மற்றும் வெள்ளத்தினால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு ஆகியவற்றால் பாகிஸ்தானின் பொருளாதாரம் மிகவும் பின்தங்கிய நிலையை அடைந்துள்ளது.

மேலும் கடந்த காலங்களில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியாவிடமிருந்து கடனாக பாகிஸ்தான் கச்சா எண்ணெயை வாங்கி வந்த நிலையில் தற்போது பாகிஸ்தானின் எரிபொருளின் தேவையை பூர்த்தி செய்வதற்கு கச்சா எண்ணெய்யை ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் ரஷ்யா மீதான பொருளாதார தடையினால் நட்பு நாடுகளுக்கு தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய்யை ரஷ்யா வழங்கி வரும் நிலையில், பாகிஸ்தான் கடனாக கச்சா எண்ணெய் பெறுவதற்கு பாகிஸ்தான் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் ரஷ்ய அதிபர் புடினை, பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் மூன்று முறை சந்தித்து கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பான கோரிக்கையை முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan plans to buy crude oil from Russia


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->