பண்ணைகளை கைவிட்டதால் 200 க்கும் மேற்பட்ட பூனை, நாய்கள் பட்டினியால் மடிந்த சோகம்..!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் கரோனா வைரஸின் தாக்கம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் நோய்வாய்ப்பட்டு ஆயிரக்கணக்கில் செத்து மடியும் சோகம் ஏற்பட்டுள்ளது. உலகளவில் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

அந்தந்த நாடுகளை பொறுத்து பல விஷயங்களில் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பாக்கிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சி நகரில் இருக்கும் செல்ல பிராணிகள் விற்பனை மையத்தில் விலங்குகள் செத்து மடிந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பாக்கிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சி நகரில் உள்ள செல்ல பிராணிகள் விற்பனை மையத்தில், ஆயிரக்கணக்கான செல்ல பிராணிகள் கூண்டுகளில் பராமரிக்க ஆட்கள் இல்லாமல் இருந்துள்ளது. 

இப்பகுதியை சார்ந்த விலங்கின ஆர்வலர் விலங்குகளின் அபயக்குரல் மற்றும் அழுகிய வாசனையை வைத்து சம்பந்தப்பட்ட கடைக்கு உள்ளே சென்று பார்க்கையில், 200 நாய்கள் மற்றும் பூனைகள் செத்து மடிந்து இறந்துள்ளது. 

இதனையடுத்து விலங்குகள் அனைத்தையும் மீட்ட ஆர்வலர், தனது இருப்பிடத்திற்கு அழைத்து வந்து தேவையான உணவை வழங்கியுள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், சுமார் 1000 விலங்குகள் அந்த பண்ணையில் இருக்கும் நிலையில், 200 க்கும் மேற்பட்ட நாய்கள் மற்றும் பூனைகள் இறந்து கிடந்தது. கூண்டுகளில் இருந்த விலங்குகள் பசியுடனும், பயத்துடனும் இருந்ததை காண முடிந்தது. கரோனாவால் விற்பனையாளர் இவைகளை கைவிட்டு சென்று இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan Pets died in sales shop due to no management in shop corona virus panic


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->