சந்திரயான் நிகழ்வுகளை இந்தியர்களை விட அதிகம் எதிர்பார்த்தது யார் தெரியுமா?! வெளியான அதிர்ச்சியான தகவல்! - Seithipunal
Seithipunal


சந்திரயான் 2 நிலவில் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறக்கியபோது, இந்திய மக்கள் போலவே பாகிஸ்தானில் உள்ள மக்களும் ஆர்வத்தோடு அதன் நிலை குறித்து கூகுளில் தேடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 6 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதிக்குள் கூகுள் டிரெண்ட்ஸில் சந்திரயான் 2, விக்ரம் லேண்டர் ஆன் மூன் உள்ளிட்ட வார்த்தைகள் அதிகம் தேடப்பட்டது குறித்து இந்தியா, பாகிஸ்தான் ,இடையே கூகுள் டிரெண்ட்ஸ்-ல் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டது. அப்போது, இந்திய மக்கள் போலவே, பாகிஸ்தான் பல்வேறு பகுதிகளிலும் இருக்கும் மக்களும் அந்த சொற்களை மொபைலில் உள்ள கூகுள் தேடுபொறியில் பதிவிட்டு தேடியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதுவும்,  அனைவரும் நன்கு உறங்கக் கூடிய நள்ளிரவான இரண்டரை மணிக்கே அதிகம் பேர் அந்த சொற்களைத் தேடியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு சந்திரயான் 2 பின் நிகழ்வுகளை கூகுளில் தேடுவது இந்தியாவில் குறைந்துவிட்ட பின்பும், பாகிஸ்தானில் அதே ஆர்வம் தொடர்ந்ததாக கூகுள் தரவு தெரிவிக்கிறது.

இந்திய ஊடகங்கள் மூலம் மக்கள் தொடர்ந்து தகவல்களைத் தெரிந்துகொண்டே இருந்ததால், கூகுளில் தேட வேண்டிய அவசியம் இந்தியாவில் ஏற்பட்டிருக்கவில்லை என இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pakistan people search about chandrayaan 2


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->