லண்டனில் தகவல் துறை அமைச்சருக்கு நேர்ந்த சோகம்..!  - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அவரது அமைச்சரவையில் தகவல் துறை அமைச்சராக இருப்பவர் மரியும் அவுரங்கசீப். பெண் அமைச்சரான இவர், பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் ஆவார். 

இவர் இங்கிலாந்து நாட்டில் லண்டன் நகரில் உள்ள காபி கடைக்கு சென்றுள்ளார். அப்போது அந்நாட்டில் வசிக்கும் வெளிநாட்டு வாழ் பாகிஸ்தானியர்கள், அவரை சூழ்ந்து கொண்டு விமர்சிக்க தொடங்கினர். இருப்பினும், மரியும் அவர்களை கண்டு கொள்ளாமல், தனது மொபைல் போனில் தன்னுடைய வேலையில் ஆழ்ந்து ஈடுபட்டார். 

இந்நிலையில், பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தது மட்டுமல்லாமல், 3.3 கோடி பேர் நிவாரணம் தேடி அலையும் சூழலில்  தள்ளப்பட்டு உள்ளனர். இதில், பொதுமக்களுக்கு நிவாரணம் அளிப்பதில் கூட பாகுபாடு காட்டப்படுகிறது என குற்றச்சாட்டு எழுந்தது. 

இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டில் ஷெரிப் தலைமையில் உள்ள அரசில் காணப்படும் ஊழலை பற்றி எதிர்க்கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியை சேர்ந்தவர்கள் தொடர்ந்துக் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இதுபற்றிய பிரதமரின் ஆடியோ உரையாடல் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், அரசுக்கு சிக்கலையும் ஏற்படுத்தி உள்ளது.  

இந்த சூழலில், லண்டனுக்கு வருகை தந்துள்ள பாகிஸ்தான் பெண் அமைச்சருக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. லண்டனில் உள்ள தெருவில் மரியும் நடந்து செல்லும்போது, அவரை பின்தொடர்ந்த வெளிநாட்டு வாழ் பாகிஸ்தானியர்கள், அவரை திருடி, திருடி என்று கூச்சலிட்டனர். 

இதுகுறித்து வீடியோ ஒன்று வெளியானது. அதில் பேசிய பெண் ஒருவர், பாகிஸ்தானில் தொலைக்காட்சியில் பெரிய விசயங்களை எல்லாம் பேசிய மரியும், லண்டனில் தனது தலையில் துப்பட்டாவை கூட போட்டு கொள்ளவில்லை என்று குற்றச்சாட்டாக தெரிவித்தார்.

இந்த வீடியோ பதிவிற்கு பதிலளித்த மரியும், "முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் வெறுப்பு மற்றும் பிரிவினைக்கான அரசியல் நம்முடைய சகோதர, சகோதரிகளிடையே விஷமாக பாதித்துள்ளது, இதைக் காண்பதற்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார். 

 இதுகுறித்து தி டான் வெளியிட்டுள்ள செய்தியில், லண்டனில் மரியும் தனது நிலைமையை நன்றாக எதிர்கொண்டார் என அவருக்கு பாகிஸ்தானிய அமைச்சர்கள் ஆதரது தெரிவித்து உள்ளனர். இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்களால், மரியும் தொடர்ந்து தொல்லைக்கு ஆளாகி இருக்கிறார் என்று அந்த பத்திரிகை செய்திகுறிப்பு தெரிவிக்கின்றது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pakistan information minister going to londan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->