தடை செய்யும் கருப்பு பட்டியலில் பாகிஸ்தானா.?.! திடுக்கிடும் தகவல்..! - Seithipunal
Seithipunal


தீவிரவாதிகளுக்கு நிதி கிடைக்க இருப்பதாய் தடுக்க அளித்த வாக்குறுதிகளை செயல்படுத்தாத காரணத்துக்காக பாகிஸ்தானை நிதி நடவடிக்கை பணிக்குழு எந்நேரமும் கருப்பு பட்டியலில் சேர்க்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

நிதி நடவடிக்கை பணிக்குழுவின் க்ரே பட்டியலில் பாகிஸ்தான் தற்போது உள்ளது. தீவிரவாதிகளுக்கு நிதி கிடைக்காமல் தடுக்க முன்வைத்த 27 செயல் திட்டங்களில் 6-ஐ மட்டுமே பாகிஸ்தான் செயல்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

ஐ.நா.வால் சர்வதேச தீவிரவாதிகளாக பிரகடனம் செய்யப்பட்ட 100க்கும் மேற்பட்டோரில் 5 பேர் மட்டும் தங்களது நாட்டில் இருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்திரிருக்கிறது.

அந்த 5 பேரில், லஷ்கரே - தொய்பா, ஜமாத் உத் தவா அமைப்புகளின் தலைவர் ஹபீஸ் முகமது சயீதும் ஒருவர் ஆவார்.

தீவிரவாதத்துக்கு நிதியுதவி அளித்த விவகாரம் தொடர்பாக மதரசாக்கள் உள்ளிட்ட 900 வகை சொத்துகளை முடக்கியிருப்பதாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த சொத்துகளில் 750 சொத்துகள், ஜமாத் உத் தவாவின் கிளை அமைப்பான பலா இ இன்சானியாத்துக்கு சொந்தமானவை ஆகும். 150 சொத்துகள், ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்புக்கு சொந்தமானவை ஆகும்.

இருந்தபோதிலும் அந்த சொத்துகளை வாங்க நிதி அளித்தது யார்? என்பதை பாகிஸ்தான் இன்னமும் கண்டுபிடிக்கவில்லை. அதன் உரிமையாளர்கள் மீது எந்த வழக்கையும் பாகிஸ்தான் பதிவு செய்யவில்லை.

இந்த காரணத்துக்காக,  தடை செய்யப்பட்ட நாடுகளின் கருப்பு பட்டியலில் பாகிஸ்தானை நிதி நடவடிக்கை பணிக்குழு எந்நேரமும் சேர்க்கலாம் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan In Black List


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->