பாகிஸ்தான் இந்து கோவில் இடிப்பு விவகாரம்.. 8 காவல் அதிகாரிகள் பணியிடைநீக்கம்..! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானில் இந்து கோவில் இடிக்கப்பட்ட விவகாரத்தில், 8 காவல் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் உள்ள வடமேற்கு பகுதியில் இருக்கும் கரக் மாவட்டத்தில் தெர்ரி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பழைமையான இந்து கோவில் உள்ளது.

பழைமையான இந்த கோவிலை புதுப்பிக்க, உள்ளூர் இந்து மக்கள் அங்குள்ள அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுள்ளனர். இந்த விஷயம் தொடர்பான தகவலை அறிந்த மாற்று மதத்தினர், கோவிலை இடித்து தரைமட்டமாக்கிவிட்டு தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இதனால் கோவில் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. 

இந்த விஷயத்திற்கு பாகிஸ்தானின் சிறுபான்மை அமைப்புகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கடுமையான கண்டனத்தை தெரிவித்தது. மேலும், இது தொடர்பாக இந்திய அரசும் பாக்கிஸ்தான் அரசை கண்டித்து இருந்தது. 

இக்கோவில் இடிப்பு சம்பவம் தொடர்பாக 350 பேரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், 100 பேர் தற்போது வரை கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள குற்றவாளிகளை கைது செய்ய அம்மாகாண அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த நிலையில், கோவில் இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, கடமையை செய்ய தவறிய 8 காவல் துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உத்தரவிட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan Hindu Temple Damaged 8 Police Officers Suspense


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->