பாகிஸ்தானில் இந்து மற்றும் கிறிஸ்துவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் புறக்கணிப்பு... கொந்தளிக்கும் யு.எஸ்.சி.ஐ.ஆர்.எப்..! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸின் தாக்கமானது, உலக நாடுகளை உலுக்கியுள்ளது. பாக்கிஸ்தான் நாட்டிலும் கரோனா வைரஸ் பரவத்துவங்கிய நிலையில், அந்நாட்டிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு உத்தரவு அமலான நாளின் துவக்கத்திலேயே, பாகிஸ்தான் அதிகாரிகள் இந்து மக்களுக்கு ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்ய மறுப்பு தெரிவிப்பதாக குற்றசாட்டு எழுந்து, பாதிக்கப்பட்ட நபரின் வீடியோ காட்சிகள் வெளியானது. 

இந்த நிலையில், பாக்கிஸ்தான் நாட்டில் இருக்கும் இந்து மக்கள் மற்றும் கிறிஸ்துவ மக்களுக்கு ரேஷன் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் சரியாக செய்யப்படுவதில்லை என்றும், சில இடங்களில் வெளிப்படையாக மறுக்கப்படுகிறது என்றும் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் பாகிஸ்தானின் மீது குற்றசாட்டை முன்வைத்துள்ளது. 

இந்த விஷயம் தொடர்பாக யு.எஸ்.சி.ஐ.ஆர்.எப் கமிஷனர் அனுரிமா பார்கவா தெரிவித்த சமயத்தில், பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் இந்து மற்றும் கிறிஸ்துவ மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்து சமூகம் பாகிஸ்தானில் சிறுபான்மையினராக இருந்து வரும் நிலையில், இவர்களின் மீதான பல வன்மங்கள், உரிமைகள் மறுப்பது தொடர்பான பிரச்சனைகள் பல நடந்து வருகிறது. 

பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சி நகரில் அமைந்துள்ள சைலானி அமைப்பு தொழிலாளர்களுக்கும், நலிவடைந்த மக்களுக்கும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கவும், உதவி செய்யவும் ஏற்படுத்தப்பட்ட நிலையில், இந்து மற்றும் கிறிஸ்துவ மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க தடையாக இருந்து வருகிறது.வளரும் நாட்டில் மக்கள் பசியால் இறக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் இம்ரான் கானிற்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், பாகிஸ்தானில் சிறுபான்மை மக்களான இந்து மற்றும் கிறிஸ்துவ மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க தடை ஏற்படுத்தும் வகையில் பல அமைப்புகள் செய்யப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதுமட்டுமல்லாது இந்து சமூகத்தவர்கள் தாக்கப்படுவதும், இந்து பெண்களை கடத்தி கட்டாய மதமாற்றம் செய்வதும் போன்ற அத்துமீறல்கள் தொடர்ந்து வருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan Hindu and christian peoples ration diverted by Muslims comity


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->