சத்தமே இல்லாமல் முக்கிய வேலையை அசால்ட்டாக முடித்த பாக்கிஸ்தான்... இந்தியா, அமெரிக்கா ஷாக்.!! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா உலகளாவிய பயங்கரவாதத்தை ஒலிக்க பல்வேறு முயற்சியை மேற்கொண்டு வருகிறது. பயங்கரவாதத்தை ஒழிக்க உலக நாடுகளுக்கு இராணுவ நிதியுதவியை அளித்து வரும் நிலையில், அதிகளவு நிதி பெரும் நாடுகளில் பாக்கிஸ்தான் இருக்கிறது. 

இருப்பினும் பாக்கிஸ்தான் பயங்கரவாத ஒழிப்பு தொடர்பாக எந்த தீவிர நடவடிக்கையும் எடுக்காமல், தொடர்ந்து பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருகிறது. மேலும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தையும் ஆதரித்து வருகிறது. 

இந்த விஷயம் அமெரிக்காவிற்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து பலமுறை அமெரிக்கா பாகிஸ்தானிற்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும், இராணுவ நிதியையும் நிறுத்திய நிலையில், பயங்கரவாதத்திற்கு ஆதரவாக செயல்படும் போக்குகளை பாக்கிஸ்தான் நிறுத்துவதாக இல்லை. 

மும்பையில் நடைபெற்ற தாக்குதலில் மூளையாக இருந்த மற்றும் லஷ்கர் இ தொய்ப்பா அமைப்பின் தளபதி சாகி உர் உட்பட சுமார் 1800 பேரின் பட்டியலை பயங்கரவாத கண்காணிப்பு பட்டியலில் இருந்து பாக்கிஸ்தான் நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த பட்டியலில் கடந்த 2018 ஆம் வருடத்தில் 7600 பெயர்கள் இருந்த நிலையில், கடந்த 18 மாதத்தில் 3800 பேரின் கண்காணிப்பு பட்டியல் நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த தகவல் உலக நாடுகளை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள நிலையில், இந்தியா மற்றும் அமெரிக்காவின் கண்டனத்திற்கு பாக்கிஸ்தான் உள்ளாகும் என்பது தெரியவந்துள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan govt relief terrorist name list


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->