முஸ்லீம் மதம் குறித்து சர்ச்சை பேச்சு.. கைது செய்யப்பட்டவரை கொலை செய்ய திரண்ட மக்கள்.. காவல் நிலையம் சூறை..!! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் நாட்டின் தலைநகரான இஸ்லாமாபாத் நகரில் உள்ள கோல்ரா (Golra) கிராமத்தை சார்ந்த நபரொருவர், முஸ்லீம் மதம் குறித்து இழிவாக பேசிதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மத நிந்தனை சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்துள்ளனர். 

அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற நிலையில், முஸ்லீம் மதம் தொடர்பாக பேசிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் அப்பகுதியில் தீவிரமாக பரவியுள்ளது. இதனையடுத்து, சம்பந்தப்பட்ட நபரை அடித்து கொலை செய்ய திட்டமிட்டு, நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு திறந்து வந்துள்ளனர். 

காவல் துறை அதிகாரிகளிடம் சம்பந்தப்பட்ட நபரை தங்கள் வசம் ஒப்படைத்துவிட்டு அமைதியாக இருக்குமாறும், நாங்கள் அவரை கொலை செய்ய வேண்டும் என்றும் முழக்கமிடவே, காவல் துறையினர் அவர்களை கண்டித்து கலைந்து செல்லக்கூறி எச்சரித்துள்ளனர். 

காவல்துறை அதிகாரிகள் எச்சரித்தும் கேட்காத மக்கள், காவல் நிலையத்தை கம்பி மற்றும் உருட்டுக்கட்டையால் அடித்து நொறுக்கவே, காவல் துறையினர் காவல் நிலையத்தை உள்புறமாக தாளிட்டு தங்களை தற்காத்து கொண்டுள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட நபர் காவல் துறையினரின் கண்காணிப்பில் இருந்த நிலையில், பக்கத்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் கலவர தடுப்பு பிரிவு அதிகாரிகள் விரைந்து வந்து தடியடி நடத்தி காவல் அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட நபரை மீட்டனர். மத ரீதியான விவகாரத்தில் காவல் நிலையம் சூறையாடப்பட்ட விவகாரம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan Golra Police Station Demolish by Civilians 19 May 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->