டபுள் கேம் ஆடி, அமெரிக்காவிடம் லாரி டயரில் சிக்கிய எலி போல அகப்பட்ட பாகிஸ்தான்.!! - Seithipunal
Seithipunal


பாக்கிஸ்தான் நாடு இந்தியாவை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் பயங்கரவாத குழுக்களுக்கு புகலிடமாக இருந்து வருகிறது. இந்த விஷயம் தொடர்பாக பாகிஸ்தானை அமெரிக்கா ஏற்கனவே எச்சரித்து இருந்தது. மேலும், பயங்கரவாத நிதியுதவியை பெற, கடந்த 2019 ஆம் வருடத்தில் பயங்கரவாதிகள் மீது பெயரளவிற்கு நடவடிக்கை எடுத்ததாகவும் அமெரிக்கா சுட்டிக்காண்பித்துள்ளது. 

பாக்கிஸ்தான் நாட்டினுடைய பயங்கரவாதம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பிராந்திய ரீதியாக பயங்கரவாதிகளுக்கு பாக்கிஸ்தான் பாதுகாப்பு அளித்து, புகலிடம் வழங்கி வருவதாகவும், பயங்கரவாதிகளுக்கு தேவையான அனைத்து சேவையையும் பாக்கிஸ்தான் செய்து வருகிறது என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

இந்தியா, ஆப்கானிஸ்தான் நாடுகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் ஆப்கான் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பல பயங்கரவாத அமைப்புகளுக்கு பாக்கிஸ்தான் ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. கடந்த 2015 ஆம் வருடத்தில் பயங்கரவாதத்தை எதிர்க்க தேசிய செயல்பாட்டு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கூறியது. மேலும், இந்த திட்டத்தின் நோக்கமாக பாகுபாடின்றி பயங்கரவாதத்தை எதிர்ப்போம் என்றும் தெரிவித்தது. 

இந்த திட்டத்தின் அம்சங்கள் இன்றுவரை எதுவும் நிறைவேற்றம் செய்யப்படவில்லை. கடந்த 2008 ஆம் வருட இந்தியாவின் மும்பை தாக்குதலில் முக்கிய புள்ளியாக செயல்பட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் சஜித் மீர் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் நிறுவனர் மசூத் அசார் போன்ற பயங்கரவாதிகளின் மீது எவ்விதமான வழக்கையும் இன்றுவரை பாகிஸ்தான் தொடுக்கவும் இல்லை, இதற்கான முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.

இவர்கள் இருவருமே பாகிஸ்தான் அரசின் பாதுகாப்பில் வசித்து வருவதாக நம்பப்படுகிறது என்றும் அறிக்கையில் கூறியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் உள்ள பயங்கரவாத இயக்கத்தின் மீது இஸ்லாமாபாத் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது போன்ற பல செயல்கள் பாகிஸ்தானின் செயல்பாட்டு திறனை குறைத்து மதிப்பிட காரணியாக அமையலாம் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan false statement terrorism control warned by America External Affair


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->