20ம் நூற்றாண்டின் தலைசிறந்த ஓவியர்.. பிறந்த தினம் இன்று.!! - Seithipunal
Seithipunal


பிக்காசோ:

20ம் நூற்றாண்டின் தலைசிறந்த ஓவியரான பாப்லோ பிக்காசோ 1881ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி ஸ்பெயினின் மலகாவில் பிறந்தார்.

ஜார்ஜெஸ் பிராக் என்பவருடன் கூட்டாக கியூபிசம் என்னும் கலைப்பாணி ஒன்றை ஆரம்பித்து வைத்தவர் என்ற வகையிலேயே இவர் பெரிதும் அறியப்பட்டார்.

தனது ஏழு வயதிலேயே ஒரு தேர்ந்த ஓவியனைப் போல ஓவியங்களை வரைந்த இவர், தன் பதினான்காவது வயது நிறைவதற்கு முன்பே பாரம்பரிய ஓவியக்கலையையும், பிளாஸ்டர் மண்ணில் தத்ரூபமான சிற்பங்கள் செய்யவும் நன்கு கற்றுக்கொண்டார்.

தன் வாழ்நாளில் பிக்காசோ 1,885 சிற்பங்கள், 1,228 ஓவியங்கள், 2,880 பீங்கான் மண்பாண்ட சிற்பங்கள், 12,000 சாதாரண சித்திரங்கள் மற்றும் 12,000 திரைச்சீலை வேலைப்பாடுகள் உட்பட ஏராளமான கலைப்பொருட்களை உருவாக்கியுள்ளார்.

அமைதி சின்னமான புறாவையும், ஆலிவ் இலைகளையும் பிரபலப்படுத்தியவர் பிக்காசோ தான். வரலாற்றில் தனக்கு என்று ஒரு நீங்காத தனி இடத்தைப் பிடித்துக் கொண்ட பிக்காசோ 1973ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி மறைந்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pablo picasso birthday 2020


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->