திடுக்கிடும் முடிவுகள் - நதிகளில் மூன்றில் ஒரு பங்கு மட்டும்தான் அதன் பாதையில் ஓடுவதாக ஆய்வில் தகவல்..! - Seithipunal
Seithipunal


உலகின் நீளமான நதிகளில் மூன்றில் ஒரு பங்கு நதிகள் மட்டும்தான் இன்னும் அதன் பாதையில் ஓடிக்கொண்டிருப்பதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

உலகில் இன்னும் அதன் பாதையில் தடையில்லாமல் ஓடும் நதிகள் குறித்த ஆய்வு ஒன்றை McGill பல்கலைக்கழகத்தின் 34 சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் World Wildlife Fund மற்றும் சில நிறுவனங்கள் இணைந்து நடத்தியுள்ளன.

சுமார் 1 கோடியே 20 லட்சம் கிலோமீட்டர் தொலைவிலான நதிகளின் ஓட்டத்தைஆய்வு செய்ததில் உலகின் மிக நீளமான நதிகளில் சுமார் 37 சதவிகித நதிகள்மட்டுமே அதன் பாதையில் ஓடுவதாக அந்தஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த 37% என்பது உலக நதிகளில் வெறும் 246 நதிகள் மட்டுமே.

1000 கிலோ மீட்டர் தொலைவை விட அதிகம் நீளம் கொண்ட உலகநதிகள் 91ல் வெறும் 21 நதிகள் மட்டுமே நதியின் பிறப்பிடத்திலிருந்து கடல் வரை நேரடி பாதையைக் கொண்டுள்ளன என அந்த ஆய்வின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நதியின் ஓட்டத்தைப்பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதை பல நாடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதே இது போன்ற நதியின் ஓட்டம் தடைபடுவதற்கு காரணமாகியுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், அந்த அறிக்கையில் உலகம்முழுவதும் சுமார் 60 ஆயிரம் மிகப்பெரிய அணைக்கட்டுகள் உள்ளதாகவும், இன்னும் 3700 அணைகள்திட்டங்களிலும் கட்டுமானங்களிலும் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

only-one-third-of-the-longest-rivers-of-the-world-remain-free-flowing-a-study-reveals


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->