நோபல் || மருத்துவத்துறையில் என்ன சாதனை செய்தார் இவருக்கு நோபல் பரிசு! - Seithipunal
Seithipunal


2022 ஆம் ஆண்டிற்கான மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு! 

உலகில் தலைசிறந்த விளங்கும் நபர்களுக்கு துறை ரீதியிலான நோபல் பரிசு வருடம் தோறும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடத்திற்கான நோபல் பரிசு இன்று முதல் அறிவிக்கப்படுகிறது. முதல் நாளான இன்று மருத்துவத் துறை சார்ந்த நபர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஸ்வாண்டே பாபோவிற்கு மருத்துவ துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் மருத்துவத்துறையில் அழிந்துபோன மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய ஆராய்ச்சிகளுக்காக இந்த நோபல் பரிசு அவருக்கு வழங்கப்படுகிறது.

டெனிசோவா என்ற அழிந்துபோன மனிதனின் ஒரு சிறிய விரல் எலும்பு மாதிரியிலிருந்து பெறப்பட்ட மரபணுவில் இருந்து தரவுகள் பெற இவருடைய ஆராய்ச்சி உதவி உள்ளது. 

மேலும் மனிதர்களுக்கிடையே உள்ள மரபணு வேறுபாடுகளை வெளிப்படுத்துவதன் மூலம் ஒருவரை ஒருவர் மரபணு ரீதியில் எவ்வாறு மாறுபடுகின்றனர் என்பதை குறித்த ஆராய்ச்சியை இவர் மேற்கொண்டு உள்ளார்.

மனிதர்களின் அழிந்துபோன ஹோமினின்களிலிருந்து வேறுபடுத்தும், மரபணு வேறுபாடுகளை வெளிப்படுத்துவதன் மூலம், அவரது கண்டுபிடிப்புகள் நம்மை தனித்தை ஆராய்வதற்கான அடிப்படையை இவருடைய ஆராய்ச்சி வழங்குகிறது. இதன் காரணமாக 2022 ஆம் ஆண்டின் மருத்துவர் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nobel Prize in Medicine to Svante Pääbo from Sweden


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->