போட்டோ எடிட்டிங்கில் ஹாலிவுட்டுக்கு டப் கொடுக்கும் நித்தி.. ஒரேயொரு போட்டோவால் சம்பவம்.! - Seithipunal
Seithipunal


பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ள குற்றவாளி நித்தியானந்தா கருத்துக்கள் கலாய்க்கப்பட்டு வருகிறது.

சிறுமி கடத்தல், ஆட்கடத்தல், கொலை வழக்கு என்று பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நித்தியானந்தா, தனக்கென தனி நாட்டினை உருவாக்கி இருப்பதாகவும், அதற்கு கைலாஸா என்று பெயரிட்டு இருப்பதாகவும், இந்த நாடு முழுக்க முழுக்க இந்து கட்டமைப்புகளால் உருக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். 

இவரை கைது செய்ய நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் பேரில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, சர்வதேச அளவிலான இன்டர்போல் காவல் துறையினரின் உதவியை நாடி ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்தலும், எங்கிருக்கிறோம் என்பதை கூறாமல், கைலாஸா நாட்டில் இருந்து நேரடியாக மக்களுக்கு ஆசி வழங்குகிறேன் என்று கூறி தினமும் லைவ்வில் வந்து பேசுகிறார். 

இன்று வரை நித்தியானந்தா எங்கு இருக்கிறார்?. உண்மையில் கைலாஸா என்ற நாடு உள்ளதா? அவருடன் சென்ற சீடர்கள் மற்றும் பெண் பக்தர்களின் நிலை என்ன என்பது குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. 

ட்விட்டர் தளத்தில் தனக்கென தனி கணக்கை தொடங்கிய நித்யானந்தா, தனக்கு தானே கைலாஸாவின் அதிபராக பொறுப்பேற்று, நாட்டிற்கான வர்த்தக நாணயத்தையும் வெளியிட்டார். தினமும் அவர் சமூக வலைத்தளம் வாயிலாக ஆதரவாளர்களிடையே உரையாற்றுவது வழக்கம். 

அந்த வகையில், இன்று பதிவு செய்துள்ள ட்விட்டர் பதிவில், " என் வார்த்தையை நான் உங்களுக்குக் கொடுக்கும்போது, ​​நான் உங்களுக்கு சக்தியைக் கொடுக்கிறேன், தத்தாஸ்து!., கடைசி இந்து கொல்லப்பட்டு ஒழிக்கப்படும் வரை இந்த இந்து எதிர்ப்பு ஊடகங்கள் நிறுத்தப் போவதில்லை. கடைசி இந்துவை அவர்கள் கொன்ற பிறகு, கதையும் இருக்கும், அவர் கொல்லப்படுவதற்கு பொறுப்பாக ஊடகம் இருக்கும். அவர் சமூக விரோத மற்றும் மனிதநேயமற்றவர், அதனால் அவர் கொல்லப்பட்டார் என்று ஊடகம் கூறும். 

இந்துக்களே விழித்துக்கொள்! வேலை, திருமணம், வீடு மற்றும் நல்ல சம்பளம் பெறுவது வாழ்க்கை அல்ல. இந்து இளைஞர்கள் மூளைச்சலவை அடைந்து வருகிறார்கள், சிறிய சிறிய "வெற்றி" தான் வாழ்க்கை; இந்து கலாச்சாரத்தை உயிருடன் வைத்திருக்க சாது வாழ்க்கையை எடுக்கும் சில தைரியசாலிகள் பயப்படுகிறார்கள், சட்டத்தை எதிர்கொள்கிறார்கள் " என்று தெரிவித்துள்ளார்.

இதையெல்லாம் பார்க்கும் நமது ஊர் நெட்டிசன்களோ நீ கொடுக்கும் பில்டப் ஓகே., போட்டோ எடிட்டிங் விஷயத்தில் ஹாலிவுட் எடிட்டர்களுக்கே போட்டி போடலாம் என்று கலாய்த்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nithyananda Latest Speech as per Twitter Account of Nithyananda Kailasa Handling 25 Sep 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->