எரிபொருள் ஏற்றி வந்த லாரி பிரேக் பழுதான துயரம்.. 10 மாணவர்கள் உட்பட 25 பேர் உடல் கருகி பலியான பரிதாபம்.! - Seithipunal
Seithipunal


ஆப்பிரிக்க நாடுகளில் அவ்வப்போது பெருமளவிலான விபத்து ஏற்பட்டு, பல மக்கள் பரிதாபமாக பலியாவது தொடர்கதையாகியுள்ளது. 

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் எரிபொருளை ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி ஒன்று விபத்திற்கு உள்ளாகி, சுமார் 25 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். நைஜீரிய நாட்டில் உள்ள லகோஜா என்ற இடத்தில் எரிபொருளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. 

அப்போது அந்த லாரியின் பிரேக் திடீரென பழுதான நிலையில், சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த வாகனங்களின் மீது அடுத்தடுத்து தொடர்ச்சியாக மோதியுள்ளது. லாரி சேதமடைந்து எரிபொருட்கள் கொட்டிய நிலையில், வாகனங்கள் தீ பிடித்து எரிந்துள்ளது. 

இந்த விபத்தில் பத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் உட்பட 25 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக பலியாகி உள்ளனர். இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NIGERIA ROAD ACCIDNET 10 STUDENTS 15 PASSENGERS DEATH


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->