பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால், பிறப்புறுப்பு நறுக்.. அமலுக்கு கொண்டு வரும் அரசு.!  - Seithipunal
Seithipunal


உலக அளவில் கொரோனா அச்சுறுத்தல் ஒரு புறமிருக்க இந்த சவாலான காலகட்டத்தில் பாலியல் குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது. குறிப்பாக நைஜீரியா நாட்டில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை அமுல்படுத்திய பிறகும் கூட பாலியல் குற்றங்களை தடுக்க முடியவில்லை. மாறாக இப்போது தான் அதிகமாக நடைபெறுகிறது என்ற செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றது.

கொரோனா காலகட்டத்தில் மட்டும் சுமார் 800 பாலியல் வழக்குகள் பதிவாகியுள்ளன இந்த நிலையில், பாலியல் குற்றங்களை குறைக்கும் பொருட்டு கடுமையான தண்டனையை அந்த நாடு அறிவித்துள்ளது. 

அதாவது அந்த நாட்டில் இனி பாலியல் குற்றங்கள் நடக்குமானால் ஆண்களின் பிறப்புறுப்பு வெட்டப்படும் மற்றும் குழந்தைகளை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்பவர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்படும். மேலும், பெண் குற்றவாளிகள் எனில் அவர்களின் கருப்பை அகற்றப்படும் என்று அதிரடியான சட்டம் ஒன்றை அந்த நாட்டு அரசு பிறப்பித்துள்ளது.

இதற்கு முன்பு உள்ள சட்டப்படி கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக 21 ஆண்டுகள் சிறை தண்டனையும் சிறார்களை பாலியல் தொந்தரவு கொடுத்த 12 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்து வந்தனர். அந்த சட்டமானது இப்போது மாற்றப் பட்டுள்ளது. இதுகுறித்து நைஜீரியாவின் கடுனா மாநில ஆளுநர் நசீர் அகமது தெரிவித்துள்ளதாவது, 'நாட்டில் இருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் கொடுமைகளில் இருந்து பாதுகாக்க இந்த சட்டம் உருவாக்கப்பட்டது' என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nigeria latest law about sexual harassment


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->