வாடகைக்கு ஹெலிகாப்டர் எடுத்து வந்து சரணடைந்த குற்றவாளி.. என்னங்கடா இப்படியெல்லாம் பண்றீங்க.! - Seithipunal
Seithipunal


நியூசிலாந்து நாட்டின் வடக்குப்பகுதியில் அமைந்துள்ள ஓடாகோ பிராந்திய பகுதியை சார்ந்தவர் ஜேம்ஸ் பிரையண்ட் (வயது 32). இவர் தன்னுடன் அறையில் தங்கியிருக்கும் நபர்களுடன் ஏற்பட்ட தகராறில், அவர்களை கத்தியால் குத்தியுள்ளார். 

இந்த விஷயம் தொடர்பாக ஜேம்ஸின் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில், கைதாகுவதற்கு முன்னதாகவே தலைமறைவாகியுள்ளார். தலைமறைவான ஜேம்ஸ் கடந்த 5 வாரமாக அங்குள்ள வயநகருவா நகரின் வனப்பகுதியில் பதுங்கி இருந்துள்ளார். 

இந்நிலையில், ஜேம்ஸ் பிரையண்ட் ஆபத்தான நபர் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கபடவே, உள்ளூர் தொலைக்காட்சியிலும் தேடப்படும் நபராக அவர் அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து, ஜேம்ஸ் சரணடைய முடிவு செய்து, வழக்கறிஞரின் உதவியுடன் அமைதியான முறையில் சரணடைய முடிவு செய்துள்ளார்.

தான் தங்கியிருந்த வனப்பகுதியில் இருந்து காவல் நிலையத்திற்கு செல்ல சொந்த செலவில் ஹெலிகாப்டர் வாடகைக்கு எடுத்து காவல் நிலையத்திற்கு சென்றார். இதன்போது பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜேம்ஸ், " காடுகளில் இருந்த நாட்கள் நன்றாக இருந்தது, தினமும் யோகா செய்தேன் " என்று தெரிவித்தார். அவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New Zealand Wanted Person Arrived Helicaptor and Approver 30 May 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->