ஆகா., ஓகோன்னு., சொல்லியே ஆப்பு வச்சிட்டிங்களே! நியூசிலாந்து பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


ஆகா., நியூசிலாந்து நாட்டை பாருங்க., எப்படி கொரோனாவை கட்டு படுத்தி இருக்காங்கன்னு இந்தியர்கள் சொல்லியதால் என்னவோ தெரியவில்லை. இன்று அந்த நாடு பொது முடக்கத்தில் சிக்கி, பொது தேர்தலையும் தள்ளிவைத்துள்ளது.

கொரோனா இல்லாத முதல் நாடாக அறிவிக்கப்பட்ட நியூசிலாந்து நாட்டில் தொடர்ச்சியாக 102 நாட்கள் கொரோனா இல்லாமல் இருந்தது. இந்நிலையில், அங்கு மீண்டும் கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில் 49 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக அங்கு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், செப்டம்பர் 19-ம் தேதி நடைபெற இருந்த பொதுத் தேர்தலை வரும் அக்டோபர் 17-ம் தேதிக்கு தள்ளி வைப்பதாக பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அந்நாட்டு பிரதமர், "சில காலம் கொரோனா நம்முடன் இருக்கும். அதற்காக தேர்தலை தொடர்ந்து தள்ளி வைப்பது நோய் பரவலின் அபாயத்தை குறைக்காது" என்று மக்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார். 

கொரோனா அச்சத்தால் அந்நாட்டின் அனைத்து கட்சிகளும் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை நிறுத்தி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new zealand election postponed


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->