100 நாட்களாக கொரோனா இல்லாத நாடு.. கொண்டாட்டத்தில் மக்கள்.!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா பாதிப்பானது, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கொரோனாவின் பரவலானது அந்தந்த நாட்டின் நடவடிக்கையால் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் கொரோனா 50 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு உறுதியான நிலையில், பிரேசிலிலும் கொரோனாவின் கோரத்தாண்டவம் அதிகரித்து உலக அளவில் இரண்டாவது பாதிப்பை பெற்றுள்ளது. 

நியூசிலாந்து நாட்டை பொறுத்த வரையில் துவக்கத்தில் சற்று கொரோனா பரவல் வேகமெடுத்து இருந்தாலும், நல்ல வேலையாக பல நடவடிக்கைகளின் காரணமாக கட்டுக்குள் வந்தது. அங்கு 1,569 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், 22 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகினர். அந்நாட்டின் மொத்த மக்கள் தொகை 4,826,349 ஆகும். 

உலகத்திலேயே முதல் நாடாக கொரோனாவின் பிடியில் இருந்து தப்பித்த நியூசிலாந்து நாடி. கடந்த 100 நாட்களாக ஒருவருக்கு கூட கொரோனா தொற்று ஏற்படவில்லை. மேலும், இரண்டாம் அலை ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால், மக்கள் கவனத்துடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New Zealand country 100 days live without corona virus


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->