நியூசிலாந்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர் தாக்குதல்.. 6 பேர் படுகாயம்., பயங்கரவாதி சுட்டுக்கொலை.! - Seithipunal
Seithipunal


நியூஸிலாந்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 6 பேர் காயமடைந்த நிலையில், பயங்கரவாதி அதிகாரிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டான்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் தன்னை விலக்கிக்கொண்டதை தொடர்ந்து, தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். அவர்கள் எங்களின் தலைமையில் ஆட்சியமைத்து, மக்களின் வாழ்க்கையையும், நாட்டின் வளர்ச்சியையும் முன்னேற்றுவோம் என அறிவித்து இருந்தாலும், அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட பிற பயங்கரவாத அமைப்புகளால் உலக நாடுகளுக்கு ஏற்படவிருக்கும் தாக்குதல் அச்சம் குறித்த விஷயத்தில் உறுதியான அறிவிப்புகள் எதனையும் தரவில்லை. 

மேலும், ஆப்கானை சாராத பயங்கரவாத அமைப்பினர்கள் தங்களின் நாட்டினை விட்டு வெளியேற வேண்டும் என தலிபான்கள் பிற பயங்கரவாத குழுக்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சொந்த நாடுகளுக்குள் மறைமுகமாக குடியேற நினைக்கும் ஐ.எஸ்., அல்கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளால் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. 

இந்நிலையில், இன்று நியூசிலாந்தில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து நாட்டில் உள்ள ஆக்லாண்ட் (Auckland) சூப்பர் மார்க்கெட்டில் கத்தியுடன் நுழைந்த ஐ.எஸ் பயங்கரவாதி, அங்கு இருந்த அப்பாவி பொதுமக்கள் 6 பேரை சரமாரியாக குத்தி இருக்கிறார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், ஐ.எஸ் பயங்கரவாதியை சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் (Jacinda Ardern) தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த நபர் கடந்த 2011 ஆம் வருடம் இலங்கையில் இருந்து நியூசிலாந்துக்கு வந்துள்ளார் என்றும், அவர் ஐ.எஸ்., பயங்கரவாத ஆதரவாளர் மற்றும் அவர்களிடம் பயிற்சி பெற்றுள்ளார் என்று விசாரணையில் தெரியவந்ததாகவும் ஜெசிந்தா தெரிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New Zealand Auckland Terrorist Attack 6 Publics Injured ISIS Terrorist Shot Dead by Police


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->