நேபாளத்தை தொடர்ந்து இந்தியாவை வம்பிழுக்கும் பாகிஸ்தான்.! அதிரடி காட்டிய மத்திய அரசு.!! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் புதிய வரைபடத்தை உருவாக்கி உள்ளது. இந்த வரைபடத்தை இந்தியா முற்றிலும் நிராகரித்து உள்ளது. மேலும் இதுதொடர்பாக கண்டனங்களையும் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்த காஷ்மீர் மாநிலத்தையும், பஞ்சாபின் சில பகுதிகளையும் இணைத்து பாகிஸ்தான் புதிய வரைபடத்தை தயாரித்துள்ளது. 

இந்த வரைபடத்தை வெளியிட்ட பிரதமர் இம்ரான்கான், இதற்கு தனது அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருப்பதாகவும், இது பாகிஸ்தான் மக்களின் லட்சியத்தை குறிப்பதாகும் தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தானின் இந்த வரைபடத்தை முற்றிலும் நிராகரித்துள்ள மத்திய அரசு, இது தொடர்பாக பாகிஸ்தானுக்கு கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசியல் வரைபடம் என்ற பெயரில் இம்ரான்கான் வெளியிட்டுள்ள வரை படத்தை நாங்கள் பார்த்தோம். 

இது ஒரு ஆபத்தான நடவடிக்கை. மேலும், இந்தியாவின் குஜராத், காஷ்மீர், லடாக், யூனியன் பிரதேசங்களையும் உரிமை கூறுவதை ஏற்க முடியாது. இந்த ஆபத்தான கூற்றுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலோ, சர்வதேச நம்பகத்தன்மையிலோ இல்லை என தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new map of pakistan released


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->