3 நாட்களாக நடைபெறும் மீட்பு பணி! மண்ணில் புதைந்த 18 பேர்! நேபாளத்தில் நடந்த சோகம்! - Seithipunal
Seithipunal


கனமழை காரணமாக நேபாளத்தில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி 18 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும், 21 பேர் மண்ணுக்குள் புதைந்தவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 

நேபாள நாட்டின் சிந்துபல் சவுக் மாவட்டத்தின் ஜுஹல் ரூரல் என்ற பகுதியில் உள்ள, மலைத்தொடர் பகுதியில் 170க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஜுஹல் ரூரல் பகுதியில் பெய்த கனமழை காரணமாக மலைத்தொடர் பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலா சரிவில் 37 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தது.

கடந்த 3 நாட்களாக நடக்கும் மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை 11 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், சனிக்கிழமை 2 குழந்தைகள் உட்பட, 7 உடல்கள் மீட்கப்பட்டது.

தற்போது வரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மண்ணுக்குள் சிக்கிய 21 பேரை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். நிலச்சரிவு நடந்த பகுதியில் மழை பொழிவு உள்ளதால் மீட்புப் பணி பகலில் மட்டும் தொடர்கிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nepal landslide 18 dead


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->