சர்ச்சை கருத்துடன் திடீர் பின்வாங்கல்.. கொந்தளிக்கும் இந்தியர்கள்...!! - Seithipunal
Seithipunal


ஸ்ரீ ராமரின் பிறப்பிடமாக கருதப்பட்டு வரும் இடம் இந்தியாவின் அயோத்தி நகரம் ஆகும். ஆனால் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி ராமர் நேபாளத்தை சார்ந்தவர் என்றும், அவரது பிறப்பிடம் இந்தியா இல்லை என்றும், நேபாளத்தில் உள்ள காத்மன்ட் அருகே இருக்கும் சிறிய அயோத்தி கிராமத்திலேயே அவர் பிறந்தார் என்றும் தெரிவித்தார். 

மேலும், கடவுள் ராமர் ஒரு நேபாள நாட்டவர் என்றும், அவர் இந்தியர் கிடையாது என்றும் கூறினார். நேபாள பிரதமரின் இந்த பேச்சானது இந்திய மக்களிடையே மட்டுமல்லாது, நேபாள மக்களிடையே பெரும் அதிர்வலையை பதிவு செய்தது. இந்த நிலையில், நேபாள பிரதமரின் பேச்சு கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.

தற்போது இந்திய விஷயம் தொடர்பாக நேபாள நாட்டின் வெளியுறவுத்துறை தெரிவிக்கையில், " ராமர் தொடர்பாக பிரதமர் தெரிவித்தது அரசியல் ரீதியான கருத்து அல்ல, அயோத்தியின் மாண்பை குறைக்கும் வகையில் அவர் பேசவில்லை. யாரது உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கில் அவர் பேசவில்லை என்று கூறியுள்ளது.

மேலும், கடந்த சில மாதமாகவே ஷர்மா ஒலி இந்தியாவை கடுமையான அளவு விமர்சனம் செய்து பேசுவதும், இந்திய எல்லைகளை ஆக்கிரமிப்பது போன்ற நடவடிக்கையை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nepal External affair Explain about Sharma Oli Speech about Ayodhya


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->