நேபாளத்தில் மாயமான விமானத்தின் பாகங்கள் கண்டெடுப்பு.!! - Seithipunal
Seithipunal


நேபாள நாட்டின் போகாராவில் இருந்து 22 பேருடன் நேற்று காலை தாரா என்ற விமானம் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே மயமானது. 

மாயமான விமானத்தில் நான்கு இந்தியர்கள், இரண்டு ஜெர்மனியர்கள், 13 நேபாள பயணிகளும் 3 விமான ஊழியர்கள் பயணித்தன.ர் விமானம் மாயமானதை அடுத்து தேடும் பணியில் நேபால் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. விமானத்தின் சிக்னல், விமானத்தின் மொபைல் போன் சிக்னல் உள்ளிட்டவற்றை கொண்டு விமானம் விபத்துக்குள்ளானதா.? விமானத்தில் நிலை என்ன என்பது குறித்து மலைப்பகுதியில் நேபால் ராணுவம் நேற்று முதல் தீவிரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தது. 

இந்நிலையில், மாயமான விமானம் விபத்துக்குள்ளானது தெரிய வந்துள்ளது. முஸ்டங் மாகாணம் தசங்-2 என்ற பகுதியில் உள்ள சனோஸ்வெர் என்ற இடத்தில் உள்ள மலையில் விமானம் விபத்துக்குள்ளானதை ராணுவம் கண்டுபிடித்துள்ளது. 

விமானத்தின் சிதைந்த பாகங்கள் மலைப்பகுதியில் கண்டுபிடித்துள்ளது. இதைதொடர்ந்து அப்பகுதியில் ராணுவம் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது. ராணுவ வீரர்கள் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவர்களின் நிலை என்ன.? யாரேனும்உயிருடன் உள்ளார்கள் என்பது குறித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nepal army locates plane crush


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->