சிறுவனின் கழுத்தை துளைத்து மறுபக்கம் வந்த மீன்..!  நடுநடுங்க வைத்த சோக சம்பவம்..! - Seithipunal
Seithipunal


மீன் பிடித்தல் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி செய்யும் பொழுது போக்காக இன்றளவும் இருந்து வருகிறது. மீன் படிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் சிறுவன் ஒருவன் அவரது குடும்பத்துடன் மீன் பிடிப்பதற்கு சென்று இருந்தார். அப்போது அவர் பெரும் விபத்தில் சிக்கி தவித்தசம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்தோனேசியாவை சேர்ந்த முகமது என்னும் 16 வயது சிறுவன் அவரது குடும்பத்துடன் மீன்பிடிக்க சென்று இருக்கிறார். அந்த சமயத்தில் யாருமே எதிர்பாராதவிதமாக ஊசி மீன் வகையை சேர்ந்த மீனானது அந்த 16 வயது சிறுவனின் கழுத்தில் சீறி பாய்ந்தது. அந்த மீனின் வாய் மிகவும் கூர்மையாக இருக்கும்.

மேலும் இந்த வகை மீன் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் தண்ணீருக்குள்ளேயே பாயும் தன்மையுடையது. எனவே, அந்த மீன் சிறுவனின் கழுத்தில் பாய்ந்ததால் அந்த மீனின் வாய் சிறுவனின் கழுத்தில் குத்தி மறுபக்கம் வெளியே வந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் சிறுவனை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு இரண்டு மணி நேரமாக மருத்துவர்கள் மீனை போராடி அகற்றினார்கள். இருந்தபோதிலும் முகமதின் உடல் நிலையானது மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

needlefish attack boy while fishing


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->