செவ்வாய் கிரகத்தில், கரடியா.?! நாசா வெளியிட்ட அரிய புகைப்படம்.!  - Seithipunal
Seithipunal


செவ்வாய் கிரகத்தில் கரடி முகம் போன்ற ஒரு அமைப்பின் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. 

செவ்வாய் கிரகம் என்பது மற்ற கிரகங்களை விட பூமியை ஒத்த அளவிற்கு வளங்களை கொண்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், அங்கு மனிதன் வாழ முடியுமா என்பது போன்ற ஆராய்ச்சிகளும் கண்காணிப்புகளும் நிகழ்ந்து வருகின்றன.

செவ்வாய் கிரகத்தை தொடர்ந்து விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில், 6560 அடி பரப்பளவில் ஒரு பெரிய கரடியின் முகம் போல அந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கின்றது. Hirise கேமரா என்ற கேமராவை பயன்படுத்தி எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் வி வடிவத்தில் ஒரு ஸ்க்ராட்ச் மூக்கு போல இருக்கின்றது.

அதற்கு மேலே இரண்டு பள்ளங்கள் கண்களைப் போல இருக்கின்றன. இந்த வடிவத்தை பார்க்க கரடியின் முகம் போல இருப்பதாக கூறி நாசா சமூக வலைத்தள பக்கத்தில் இந்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கின்றது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NASA release Bear photo in marse


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->