மனிதகுலத்தின் அடுத்தகட்ட செயல்பாட்டிற்கு, சத்தமே இல்லாமல் செயல்பட்ட அமெரிக்கா.!! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் உள்ள புளோரிடா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் ஏவப்பட்டுள்ளது. ரோவர் மற்றும் ஹெலிகாப்டருடன் அமெரிக்க விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது. தற்போது செவ்வாய் கிரத்திற்கு அனுப்பப்பட்டுள்ள ரோவருக்கு "பெர்சிச்வரன்ஸ்" என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த விண்கலம் 7 மாத பயணத்திற்கு பின்னர் வெற்றிகரமாக விண்ணில் தரையிறங்கும் என்றும், இதில் உள்ள அதிநவீன கருவிகள் மூலமாக செவ்வாய் கோளின் பாறை மாதிரிகள் சேகரித்து ஆய்விற்கு உட்படுத்தவும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. 

செவ்வாய் கிரகத்தை பொறுத்த வரையில், ஒருவருடம் என்பது 687 நாட்கள் ஆகும். இப்போது அனுப்பப்பட்டுள்ள விண்கலம் செவ்வாய் கிரகத்தின் பழைமை தன்மை தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொள்ளும் என்றும், மனிதன் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.


 
மேலும், இந்த விண்கல பயணம் மனிதகுலத்தின் விண்வெளி ஆய்வு முயற்சிக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த விண்கலம் வேற்றுகிரகத்தில் முதன் முதலாக பறக்க கூடிய ஹெலிகாப்டரையும் அனுப்பியுள்ளதால், மாபெரும் சாதனையை படைக்க காத்துகொண்டு இருக்கிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NASA Mars plan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->