ஜப்பானை தாக்கவரும்  'நன்மடோல்' புயல் - முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்.! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானில் பெய்த கனமழை காரணமாக பல கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கும் நிலையில், அங்கு மேலும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் வெள்ளம் வடிந்திருந்தாலும், அண்டை நாடான இந்தியாவின் சில பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் உயரும் அபாயம் உள்ளதாக பாகிஸ்தான் அதிகாரிகள் கவலை தெரிவித்தனர். 

இதேபோல் நேபாளத்திலும் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சுதுர்பாசிம் மாகாணத்தின் அச்சாம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் அங்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. 

அந்த வீடுகளில் இருந்தவர்கள் உயிரோடு மண்ணில் புதைந்தனர். இதை தொடர்ந்து அங்கு உடனடியாக மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு தீயணைப்பு வீரர்கள், போலீசார் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் உள்ளிட்டோர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டதில் 17 பேரை பிணமாகத்தான் மீட்கப்பட்டது. 

இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சில நாள்களுக்கு மிக கனமழையும் கடுமையான வெள்ளமும் ஏற்படும் என்று அந்நாட்டின் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாட்டின் பிற பகுதிகளில் இனிவரும் மாதங்களில் வழக்கத்தை விட மிகக் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து, ஜப்பானின் தெற்குப் பகுதியான கியூ‌‌ஷு தீவு பகுதியை கொடூரமான சூறாவளி தாக்கும் என்றும் அந்த சூறாவளி கடும் சேதங்களை ஏற்படுத்தும் என்றும் அந்நாட்டு வானிலை மையம் எச்சரித்துள்ளது. 

இதன்படி ஜப்பானின் தென்மேற்கு பகுதிகளை 'நன்மடோல்' என்கிற கொடூரமான புயல் தாக்க இருப்பதாவும், அதை தொடர்ந்து கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற பேரிடர்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதை தொடர்ந்து அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

'Nanmadol' storm attack jappan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->