இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு போராட்டம்.. 20 வயது இளம்பெண் மரணம்...! - Seithipunal
Seithipunal


இராணுவத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் தலையில் சுடப்பட்டு பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்றுவந்த 20 வயது பெண்மணி உயிரிழந்துள்ளார்.

மியான்மரில் நடைபெற்ற தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கூறி, கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி மியான்மர் அரசு தலைவர் ஆன் சான் சூகி உட்பட பல்வேறு முக்கிய தலைவர்கள் அந்நாட்டின் இராணுவத்தால் கைது செய்யப்பட்டனர். 

மேலும், ஜனநாயக ரீதியிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டு, இராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டது. நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இராணுவ ஆட்சி அமல்படுத்தப்படுவதாகவும், ஒரு வருடத்திற்கு இது தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மியான்மர் மக்கள் இரண்டு வாரமாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், 495 பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 3 வருட சிறை தண்டனையின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், கடந்த வாரம் மியான்மர் தலைநகர் நேப்பிடாவில் இராணுவத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ஆன் சான் சூ என்ற 20 வயது பெண்மணி தலையில் சுடப்பட்டு பலத்த காயத்துடன் மருத்துவனையில் அனுமதி செய்யப்பட்டார். 

இவர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில், மியான்மரில் நடைபெற்ற இராணுவ ஆட்சி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர்நீத்த முதல் மரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு அந்நாட்டு மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Myanmar Army Govt Peoples Protest girl Murder due to Army Officers shoot


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->