மியான்மரில் வான்வழித் தாக்குதல் - தாய், குழந்தை உட்பட 5 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


மியான்மரில் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் தாய், குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

மியான்மரில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயகக்கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. ஆனால் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி 2021 பிப்ரவரி 1 அந்நாட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.

இதையடுத்து ராணுவத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்திய கிளர்ச்சி குழுக்கள் செயல்பட்டு, அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து கிளர்ச்சி குழுக்களை ஒடுக்க ராணுவத்தினரும் பதிலடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தாய்லாந்தின் எல்லைக்கு அருகில் மியான்மரின் கிழக்கில் உள்ள கரேன் பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமங்கள் மீது ராணுவத்தினர் திடீரென வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த பயங்கர வான்வழித் தாக்குதலில் தாய், குழந்தை உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயம் அடைந்துள்ளனர். மேலும் இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து 2,700-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று உள்ளூர் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Myanmar air strike kills five including mother and child


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->