சர்க்கரையை கட்டுப்படுத்தும் காளான் ஊத்தப்பம்..! - Seithipunal
Seithipunal


சர்க்கரையைக் கட்டுப்படுத்தி ஆரோக்கியத்துடன் வாழ வைக்கும் காளான் ஊத்தாப்பம் செய்வது எப்படி? 

நிலவு இல்லாத உலகத்தை கூட படைத்துவிடலாம்  நோயில்லாத மனிதனைப் பார்க்க முடியாது என்று சொல்கிற அளவுக்கு இன்றைக்கு  நோய்கள்  பெருகிவிட்டன.  விவசாயத்தில் நஞ்சான ரசாயன உரங்களை  சேர்த்து  விளைய வைத்ததன் விளைவு  இளம் வயதினருக்கும் பல்வேறு விதமான நோய்கள். 

அதிலும் குறிப்பாக,  சர்க்கரை வியாதி என்பது மிக மோசமாக இன்று அனைவருக்கும் வருகிறது. உடல் எடையைக் கூறுவது போல,  சர்க்கரையின்  அளவைக் குறிப்பிட்டு பேசிக்கொள்கின்றனர். இதை எப்படி கட்டுப்படுத்துவது? பலரும் பல்வேறு விதமான மருத்துவ முறைகளை கையாண்டுவருகின்றனர். 

உணவே மருந்து  என்றனர் நம் முன்னோர்கள். அனைத்திற்கும் உணவுதான் காரணம். எனவே, இந்த மருத்துவ செய்தியில் நாங்கள் சொல்வதைப் பின்பற்றி நீங்களும் ஆரோக்கியத்துடன் வாழலாம். 

காளான் ஊத்தாப்பம்

 காளாண், சோளம், கீரை மற்றும் மிளகு ஆகியவற்றைக் கொண்ட ஊத்தாப்பம் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச் சிறந்த உணவு.  அதிலும் இந்த காளான்  ஊத்தாப்பம் பல்வேறு சத்துக்களைக் கொண்டது.  

தேவையான பொருட்கள்

தோசை மாவு  - 2 கப்

வெங்காயம் நறுக்கியது - 2

நறுக்கிய குடைமிளகாய் -1 

பச்சை மிளகாய் நறுக்கியது - 1 

கருவேப்பிலை நறுக்கியது - 1 கைப்பிடி

காளான் நறுக்கியது - 1 கப்

கரம் மசாலா - 1 தேக்கரண்டி

உப்பு - தேவைக்கு ஏற்ப

எண்ணெய்  -  தேவைக்கு ஏற்ப

செய்முறை விளக்கம்

கடாயில் எண்ணெய்  ஊற்றி வெங்காயம், குடைமிளகாய், பச்சை மிளகாய், கருவேப்பிலை, உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர், காளான், கரம் மசாலா சேர்த்து வதக்கி அடுப்பை அணைத்து ஆற வைக்கவும். தோசைக்கல்லில் 2 கரண்டி மாவை ஊற்றி அதன் மேல் வதக்கிய காளான் மசாலாவை தூவவும். மிதமான சூட்டில் 3 நிமிடம் மூடி வைக்கவும். பின் திருப்பி போட்டு  1 நிமிடம் சுட்டு  சுவையாக சூடாக பரிமாறவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mushroom infusion to control sugur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->