மும்பை தீவிரவாத தாக்குதல்: இலங்கை தலைநகரில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு வெளியே போராட்டம்.! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் இந்தியா, மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி அடுத்தடுத்து பயங்கரவாத தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலால் மும்பை மட்டும் இன்றி ஒட்டுமொத்த நாடே அதிர்ந்தது.

மேலும் இந்த பயங்கர தாக்குதலில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், வெளிநாட்டை சேர்ந்தவர்கள் உள்பட 166 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், மும்பை பயங்கரவாத தாக்குதலின் 14ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. 

இதை முன்னிட்டு இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு வெளியே புதிய ஜனநாயக கட்சி முன்னணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின்போது, "பயங்கரவாதத்தை ஒழிப்போம், பயங்கரவாதத்தினை ஒழிக்க பாகிஸ்தான் துணை நிற்க வேண்டும்" என்று தெரிவித்தனர். 

மேலும் பாகிஸ்தானிய பயங்கரவாதம் தெற்காசியா மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகத்திற்கும் அச்சுறுத்தல் என்ற கருப்பொருள்களை அடிப்படையாக கொண்டு நடந்த இந்த போராட்டம் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. 

இதையடுத்து பாகிஸ்தான் தூதரக நிர்வாக அதிகாரியிடம், புதிய ஜனநாயக மக்கள் முன்னணி கட்சியின் பொது செயலாளர், வி.ஜி யோகராஜன் பிள்ளை பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டுவதற்கான நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mumbai terrorist attack protest outside Pakistan Embassy in Sri Lanka


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->