பதறவைக்கும் வீடியோ.! ஒரு கையில் சிகரெட், மறு கையில் பச்சிளம் குழந்தை.! கொடூர தாயின் கோர குணம்.! - Seithipunal
Seithipunal


அமெரிக்க நாட்டில் டென்னிஸியில் , பெற்ற குழந்தையை ஒரு கையில் தூக்கிக் கொண்டே இன்னொரு கையில் சிகரெட் பிடித்து அந்த புகையை குழந்தை மேல் விடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

அமெரிக்காவை சேர்ந்த டைப்ரஷா செஸ்டோன் என்னும் 24 வயது பெண் அந்த வீடியோவை லைவாகக் காண்பித்ததுதான் இன்னும் அதிர்ச்சிக்குரிய சம்பவம்.

அந்த வீடியோவில் ஒரு கையில் குழந்தையை லிஃப்டிங் செய்வது போல் ஏற்றி, இறக்கி, சுற்றி கொண்டும் இருந்தார். இன்னொரு கையில்  சிகரெட்டைப் புகைத்து, அந்தப் புகையை குழந்தை மேல் விடுகிறார். அந்தக் பெண் குழந்தை பிறந்து ஒரு மாதம் தான் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. 

அந்தக் கொடூர வீடியோவைக் கண்ட சில இணையவாசிகள் அதிகாரிகளிடம் புகார்  தெரிவித்திருக்கிறார். அவர்கள் அந்தப் பெண்ணை அணுகி காரணம் கேட்ட போது ”அந்தக் குழந்தையே எனக்கு வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

மேலும் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்று பார்த்த போது அறையில் நிறைய மது பாட்டில்கள் இருந்துள்ளது என்று அங்குள்ள ஊடககளின் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

இதை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் அந்த கொடூர தயாயை குற்றவியல் வழக்கில் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mother Horrible his baby


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->