மகளுக்காக மீண்டும் தாயாகிய சுவாரசியம்.. நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் தாயின் தாய்மை செயல்..!! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரை சேர்ந்தவர் லாக்வுட். இவர் பல் மருத்துவராக இருந்து வருகிறார். இவருக்கு, கடந்த 2014 ஆம் வருடத்தில் திருமணம் நடைபெற்று முடிந்தது. லாக்வுட்டின் தாத்தா உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், தனது குழந்தையுடன் தாத்தாவை சந்திக்க வேண்டும் என்ற ஆவலில், தம்பதி குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளனர். 

இதனையடுத்து கணவருடன் இணைந்து ஒரு வருடமாக நிலையிலும் கருத்தரிக்கவில்லை. மேலும், கருத்தரிப்பு மையத்தில் இது தொடர்பாக பரிசோதனை மேற்கொண்டு, இரண்டு வருட தொடர் சிகிச்சைக்குப் பின்னர் பல முறை கருத்தரித்தும் பலனில்லை. மேலும், தொடர்ந்து பலமுறை கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. ஒரு முறை இரட்டை குழந்தை உருவாகியும் கருவானது சிதைந்துள்ளது. 

இதன் பின்னர், லாக்வுட்டின் மருத்துவர் வாடகைத்தாய் குறித்து ஆலோசனை கூறியுள்ளார். மேலும்,லாக்வுட்டின் கருமுட்டை ஆரோக்கியமாக இருக்கும் நிலையில், அவரது கர்ப்பப்பை பலவீனமாக இருக்கும் காரணத்தால் கரு தங்கவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதில், குழந்தை இல்லாமல் இருப்பதை விரும்பாத லாக்வுட், குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று எண்ணி வாடகைத்தாய் முறைக்கு ஒப்புக்கொண்டுள்ளார். 

மேலும், இதற்கு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டால் செலவு குறைவு என்ற காரணத்தாலும், நமது ஜீனிலேயே இருக்கும் என்ற காரணத்தாலும் கொஞ்சம் தயக்கம் காட்டிய லாக்வுட், கடைசியாக தனது தாயையே வாடகைத் தாயாக மாற்றியுள்ளார். வாடகைத்தாய்க்கு பல நபர்களை சந்தித்த நிலையில், இறுதியில் அவரது தாய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

அவரது தாய்க்கு 51 வயதாகும் நிலையில், அவர் இது குறித்து லாக்வுட் கூறுகையில், தனது தாயை நான் வாடகை தாயாக மாற்றுவேன் என்று எண்ணிக்கூட பார்க்கவில்லை. தனது மகளுக்காக மீண்டும் தாயாகியுள்ள எனது தாய் ஜூலிக்கு எங்களது குடும்பம் என்றும் நன்றியுடன் இருக்கும்.. மேலும், ஜூலி 19 மாரத்தான் போட்டியில் ஓடியிருக்கிறார். இதனை தவிர்த்து பல போட்டிகளிலும் பங்கேற்று உள்ளார். செயற்கை கருத்தரித்தல் தொடர்பான முறைகள் நிறைவு பெற்று, தற்போது ஜூலி கர்ப்பம் தரித்து இருக்கிறார். இதனால் குடும்பமே பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mother get pregnancy by Artificial insemination in America


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->