நட்பு நாடுகளுடன் முக்கிய ஆலோசனை.. கெத்து காட்டும் அமெரிக்கா.!! - Seithipunal
Seithipunal


அமெரிக்க வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் மோர்கன் ஓர்டகஸ் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக்கேல் பாம்பியோ இன்று ஆஸ்திரேலியா, பிரேசில், இந்தியா, இஸ்ரேல் மற்றும் கொரியா குடியரசின் வெளியுறவு அமைச்சர்களுடன் பேசினார்.

நமது பொருளாதாரங்களை மீண்டும் ஏற்படுத்துவதற்கும், தவறான தகவல்களை எதிர்ப்பதற்கும் நெருக்கமான ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதே நேரத்தில், எதிர்கால தொற்றுநோய்களைத் தடுப்பதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளின் அவசியம் தொடர்பாகவும் பேசப்பட்டது. 

வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ மற்றும் நட்பு நாடுகள் கொரோனா தொற்றுநோய்க்கு தீர்வுகாணும் விதமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி விவாதித்தனர் " என்று அமெரிக்க வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் மோர்கன் ஓர்டகஸ் தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Morgan Ortagus Press meet about External affair country discuss


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->