வரலாற்றில் இன்று... மின்சாரத்தின் தந்தை.. பிறந்த தினம் இன்று.!! - Seithipunal
Seithipunal


மைக்கேல் ஃபாரடே :

'மின்சாரத்தின் தந்தை' என்று அழைக்கப்படும் மைக்கேல் ஃபாரடே 1791ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார்.

காந்தவியல்-மின்சாரவியல் இடையே உள்ள தொடர்பை ஆய்வுகளின் மூலம் நிரூபித்த மேதை மைக்கேல் ஃபாரடே. இவர் மின்காந்த தூண்டலைக் கண்டுபிடித்தவர். கம்பிச் சுருளுக்குள் காந்தத்தை நகர்த்துவதன் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்று கண்டறிந்தார்.

உலகிலேயே அதிகபட்ச பரிசோதனைகள் செய்து பார்த்த அறிவியல் அறிஞர் என்று போற்றப்படும் இவர் 1867ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி மறைந்தார்.

புற்றுநோய் ரோஜா தினம் :

புற்றுநோய் ரோஜா தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. வெளிநாட்டை சேர்ந்த 12 வயது மெலிண்டா ரோஸ் என்ற பெண் குழந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவர் தன்னை போல் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரோஜா பூக்களை கொடுத்து அவர்களுக்கு மனஉறுதியை அளித்து வந்தார். எனவே அவர் இறந்த தினத்தை புற்றுநோய் ரோஜா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இத்தினத்தில் புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள். இதன் மூலம் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு ஒரு மனஉறுதி ஏற்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

michael faraday birthday 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->