கருப்பு நிறமாக மாறிய கடல்! அவசர நிலையை பிரகடனப்படுத்திய பிரதமர்! - Seithipunal
Seithipunal


மொரிஷியஸ் நாட்டின் கடல் பகுதியில் பாறையில் மோதி விபத்துக்குள்ளான எண்ணெய் கப்பலில் இருந்து எரிபொருள் கசிவது மோசம் அடைவதால் சுற்றுச்சூழல் அவசர நிலையை அந்நாட்டு பிரதமர் பிரகடனப்படுத்தி உள்ளார்.

கடந்த இரண்டு வாரங்கள் முன் சர்வதேச அளவிலான கடல் பாதுகாப்பு தளமாக அறியப்படும் பாயிண்ட் டி எஸ்னி பகுதியில் உள்ள பாறை மீது, ஜப்பான் நாட்டின் நிறுவனத்திற்கு சொந்தமான எம் வி வகாஷியோ எனும் கப்பல் 3500 டன் எரிபொருளுடன் எதிர்பாராத விதமாக மோதி நின்றது.

கப்பலில் இருந்த குழுவினரும் மீட்கப்பட்ட நிலையில், கப்பல் மேலும் பாறையில் மோதியதால் கப்பலில் இருந்த எரிபொருள்கள் கடலில் கசியத் தொடங்கிது. 

எரிபொருள் கசிவை தடுக்கும் முயற்சியில் மொரிஷியஸ் எவ்வளவோ முயற்சித்தும் நிலைமை கை மீறி போவதை உணர்ந்த மொரிஷியஸ் சுற்றுச்சூழல் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை அந்நாட்டின் பிரதமர் பிரவிந்த் ஜூக்னாத் தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார். மேலும், இது தெடர்பாக பிரான்சிடம் அவசர உதவி கோரி உள்ளார் மொரிஷியஸ் பிரதமர்.

இதக்கிடையே, மொரிசியஸ் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் கடல்வளத்தை இந்த எரிபொருள் கசிவு பேரழிவு தரக்கூடிய சேதம் என சுற்றுச்சூழல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். 

உலகின் மிகப் பழமையான பவளப்பாறைகளை கொண்டுள்ள கடல் பகுதி என்பதாலும் இதனை சரி செய்ய தீவிர முயற்சிகளை அந்நாடு எடுத்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mauritius ship accident


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->