செவ்வாய் கிரகத்திற்கு செல்ல ஆசைப்பட்ட உள்ளங்களுக்கு, பகீரென வெளியான அதிர்ச்சி செய்தி..!  - Seithipunal
Seithipunal


சூரியனில் இருந்து நான்காவது கோளாக செவ்வாய் இருக்கிறது. இந்த கோளின் மேற்புறத்தில் இரும்பு ஆக்ஸைடு காணப்படுவதால்., செவ்வாய் கோள் செந்நிறத்துடன் இருக்கிறது. இதன் காரணமாகவே செவ்வாய் என்ற பெரும் இடப்பட்டது. 

செவ்வாய் கிரகம் குறித்த ஆராய்ச்சியில் அணைத்து நாடுகளும் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிலையில்., தங்களின் ஆராய்ச்சிக்காக பல்வேறு செயற்கை கோள்களை அனுப்பி தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றது. 

செவ்வாய் கிரகத்தின் தட்பவெப்ப நிலை மற்றும் நீரை., வாயு., புவியியல் பண்புகள் போன்றவை குறித்தும் தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. செவ்வாய்கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்பி அமெரிக்கா., சோவியத் யூனியன்., ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்தியா போன்ற நான்கு நாடுகள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 

mars, mars images, mars planet images,

இதில் அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன் தனது விண்கலத்தை செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதனைத்தொடர்ந்து செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ இயலுமா? இதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா? என்பது தொடர்பான ஆராய்ச்சியில் மனிதனை அனுப்பி மேற்கொள்ள அமெரிக்கா மற்றும் ரஷியா போன்ற பல நாடுகளும் முயற்சித்து வருகிறது.

மேலும்., செவ்வாய் கிரகத்தில் ரோவர் மூலமாக ஆராய்ச்சி செய்த அமெரிக்கா., செவ்வாய் கிரகத்தில் பூச்சிகள் வாழ்வதற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாக தெரிவித்த நிலையில்., மனிதன் செவ்வாய் கிரகத்தில் வாழ்தல் தனது சுயநினைவை இழந்து., டிமென்ஷியா என்ற மனநோய்க்கு உள்ளாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும்., மனிதன் செவ்வாய் கிரகத்தில் வாழ முயற்சிக்கும் பட்சத்தில்., முதல் பிரச்சனையாக சுகாதார பிரச்சனைகள் இருக்கும் என்றும்., இது உலோகம்., பிளாஸ்டிக் மற்றும் மனிதனின் தோல் வழியாக பயணம் செய்து கதிர்வீச்சுகள் மூலமாக புற்றுநோய் மற்றும் கடுமையான அறிவாற்றல் குறைபாடு போன்ற பிரச்சனையை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mars living mens should affect disease


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->