ஜெராக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


ஜெராக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜான் வின்சென்டின் உயிரிழந்தார்.

ஒரு பேப்பரில் எழுதியவற்றை ஒளி நகல் இயந்திரத்தைப் பயன்படுத்தி பல ஆயிரக்கணக்கான நகல்கள் எடுக்க முடியும். இந்த நகலை எடுப்பதற்கு ஒளியை பயன்படுத்துவதால், இது ஒளி நகல் இயந்திரம் என்று உலகெங்கும் அழைக்கப்படுகிறது.

அந்த வகையில் ஒளி நகர் இயந்திரத்தை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்களில் முதன்மையானது 'ஜெராக்ஸ்' ஆகும். ஜெராக்ஸ் என்பது ஒரு நிறுவனத்தின் பெயர். இந்நிறுவனம் அமெரிக்காவில் உள்ளது. காகிதத்தில் எழுதியவற்றை ஒளி நகல் எடுப்பதை இந்தியாவில் 'ஜெராக்ஸ்' எடுப்பது என பெரும்பாலான மக்களால் கூறப்படுகிறது.

ஆனால், ஜெராக்ஸ் என்பதும் ஒளிநகர் இயந்திரத்தை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனமாகும். இதனிடையே, ஜெராக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக ஜான் விசென்டின் (வயது 59) செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில், ஜெராக்ஸ் நிறுவன சிஇஓ ஜான் விசென்டின் நேற்று உயிரிழந்தார். உடல்நலக்குறைவு காரணமாக விசென்டின் உயிரிழந்ததாக ஜெராக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து இடைக்கால சிஇஓ-வாக ஸ்வீவ் பிராண்ட்ரோஸ்வ் நியமிக்கப்படுவதாக ஜெராக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Managing director of Xerox company died due to ill health.


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->