தாலிபான் ஆட்சி அமைத்தற்கு மகிழும் பெரும்பான்மையான பாகிஸ்தானியர்கள்..!! கருத்து கணிப்பு கூறுவது என்ன..!! - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்க நோட்டா படை பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வந்தது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமெரிக்க படைகளை திரும்ப பெறுவதாக அறிவித்தது.

அதனால், அங்கு உள்நாட்டு போரில் ஈடுபட்டு வந்த தாலிபான்கள் எழுச்சியுற்று ஆப்கானின் ஆட்சியை கைப்பற்றினர். அந்நாட்டு அதிபர் அந்நாட்டை விட்டு வெளியேறினார்

 ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர். பல உலக நாடுகள் தாலிபான்கள் ஆட்சி அமைத்தற்கு கண்டனம் தெரிவித்து வந்தன.அது மட்டுமின்றி ஆப்கான் அரசை அங்கீகரிக்க முடியாது எனவும் தெரிவித்திருந்தன.

இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள பெரும்பாலான மக்கள் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அமைத்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர் என கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

Gallup Pakistan என்ற அமைப்பு கடந்த ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 5 வரை நடத்திய கருத்து கணிப்பில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதாவது 55% பாகிஸ்தானியர்கள் தாலிபான் ஆட்சிக்கு ஆதரவு தந்துள்ளனர்.

மேலும், 25% மக்கள் எதிராகவும் கருத்து தெரிவித்துள்ளனர். இதில் குறிப்பாக கைபர் பக்துன்கவா மாகாணத்தை சேர்ந்த 65% மக்கள் தாலிபான் ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Majority Pakistan people happy with talibans rules in Afghanistan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->