ட்விட்டரில் அவதூறுக்காக ட்ரெண்ட் ஆன ஸ்ரீராமர்.! ஈராக்கில் கிடைத்த ஸ்ரீராமன் மற்றும் ஆஞ்சிநேயனின் கற்சித்திரங்கள்.!!  - Seithipunal
Seithipunal


இஸ்லாமிய நாடுகளில் ஒன்றாக விளங்கிவரும் ஈராக்கில் ஸ்ரீராமனின் உருவாசித்திரம் பொறிக்கப்பட்டு இருந்த கற்சிற்பங்கள் இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி பெரும் மகிழ்ச்சியை நாட்டு மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. 

அன்றைய இந்தியாவின் சிந்து சமவெளி நாகரீகம் மற்றும் மெசபடோமியா நாகரீகம் குறித்த ஆய்வுகளை ஈராக்கில் இருக்கும் பகுதியில் ஆய்வுகளை மேற்கொள்ள இந்திய வரலாற்று ஆய்வாளர்கள் விருப்பியுள்ளனர். இவர்களின் விருப்பம் மற்றும் திட்டப்படி ஈராக்கில் உள்ள தர்பந் ஐ பெலுகா மலையில் சென்று சோதனை செய்துள்ளனர். 


அந்த மலையில் இவர்கள் சோதனை மேற்கொண்ட சமயத்தில் கையில் வில்லேந்தி., இடுப்பில் சிறிய அளவிலான வாளை வைத்து மேலாடை அணியாத அரசனை போன்ற உருவமும்., அந்த அரசனை குனிந்து ஒருவர் வணங்குவது போலவும் சித்திரம் வடிவமைக்கப்பட்டு இருந்தது. 

இந்த சித்திரத்தில் அரசனை வணங்கும் சித்திரமானது பகவான் ஸ்ரீ ஆஞ்சிநேயரை போலவும்., கம்பீரமாக நிற்கும் அரசன் ஸ்ரீராமர் ஆகியோரின் தோற்றத்திற்கு ஒப்பிடப்பட்டு இது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. 


இந்த சிற்பத்தை ஆராய்ச்சி செய்த வரலாற்று ஆய்வாளர்கள்., இந்த கற்சிற்பம் கிமு.2000 வருடத்திய சிரிப்பான் என்றும்., இந்த சிற்பத்தின் மாதிரியை எடுத்து வந்து அயோத்தி இராமர் கோவில் வைக்க உத்திரபிரதேச அரசு கோரிக்கையும் விடுத்துள்ளதாக தெரிவித்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lord Rama statue and Sri aanjijeyar statue founded in Iraq


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->