உயிரை நினைத்து பயப்படாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த நிறைமாத கர்ப்பிணி நர்ஸ்... விளையாண்ட விதி.. அரங்கேறிய கண்ணீர் சோகம்.!! - Seithipunal
Seithipunal


கரோனா வைரஸை கட்டுக்குள் வைக்க பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மருத்துவர்கள், நர்ஸுகள் மற்றும் மருத்துவ குழுவினர்கள், துப்புரவு பணியாளர்கள் என அனைவரும் தங்களின் உயிரை பொருட்படுத்தாது பணியாற்றி வருகின்றனர். காரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்கும் சமயத்தில், சில நேரத்தில் மருத்துவ பணியாளர்களும் உயிரிழக்க வேண்டிய சோகம் ஏற்படுகிறது. 

இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டன் அருகேயுள்ள லூட்டான் நகரில் அமைந்துள்ள டன்ஸ்டபிள் பல்கலைக்கழக மருத்துவமனையில் கடந்த 5 வருடமாக நர்சாக பணியாற்றி வந்தவரின் பெயர் மேரி அகியேவா அகியா போங் (வயது 28). இவர் ஆப்ரிக்க நாட்டினை சார்ந்தவர் ஆகும். இவர் இலண்டனில் பணியாற்றி வரும் நிலையில், இவர் தற்போது கர்ப்பிணியாக இருந்து வருகிறார். 

இவர் கர்ப்பிணியாக இருந்தாலும், மக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ள நிலையை எண்ணி மருத்துவமனைக்கு சென்று தனது பணிகளை தொடங்கிய நிலையில், கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதியன்று இவருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. பின்னர் ஏப்ரல் 7 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட நிலையில், இவரது உடல்நலம் முதலில் முன்னேற்றம் கண்டுள்ளது. 

இவர் பிழைத்துவிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில், கரோனா வைரஸின் தாக்கம் ஓரிரு நாட்களில் தீவிரமாகியுள்ளது. இவரது குழந்தையை முதலில் காப்பாற்றவேண்டும் என்று முடிவெடுத்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சை மூலமாக அழகான பெண் குழந்தையை பிறந்துள்ளது. தொடர்ந்து தாய்க்கும், சேய்க்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஈஸ்டர் பண்டிகையன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

London pregnant nurse died corona positive his baby ok


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->