55 இலட்சம் பின்தொடர்பாளரை கொண்ட பூனைக்கு நேர்ந்த சோகம்..! கண்ணீரில் உரிமையாளர்.!! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா நாட்டில் உள்ள இண்டியானா மாகாணத்தை சார்ந்தவர் மைக் ப்ரடாஸ்கி. இவர் செல்லப்பிராணியாக பூனையொன்றை வளர்த்து வந்துள்ளார். இந்த பூனைக்கு லில் பாப் என்று பெயரும் சூட்டியுள்ளார். 

இந்த பூனையானது பிற பூனைகளை போல இல்லாமல், உருவத்தில் சிறிதளவு மாறுபட்டு இருந்ததால் சமூக வலைத்தளங்களில் பெரும் பிரபலமாக இருந்து வந்தது. 

மேலும்., இப்பூனைக்கு வளர்ச்சிக்குறைவு னாய் போன்ற பல உடல்நல குறைபாடுகள் மற்றும் பிரச்சனைகளோடு பிறந்திருந்த நிலையில்., பூனையின் பாத்தில் இருக்கும் விரல்கள் கூடுதலாக இருந்துள்ளது.

lil bab,

இதுமட்டுமல்லாது வளர்ச்சியடையாத தாடைகள்., பற்கள் இருந்தும் நாக்கை வெளியே நீட்டும் நிலை போன்ற தனித்தோற்றத்தின் காரணமாக இணையத்தில் தொடர்ந்து பிரபலமடைந்து, முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 55 இலட்சத்திற்கும் அதிகமான பாலோவர்ஸ் வைத்துள்ளது. 

மேலும்., இந்த பிரபலத்தன்மை மூலமாக பிற பூனைகளுக்கு உதவி நிதி திரட்டி வந்த நிலையில்., நேற்று உடல்நலக்குறைவால் லிப் பாப் உயிரிழந்தது. இந்த தகவலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மைக் வெளியிட்டதை அடுத்து, ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lil bab cat died due to poor health fans feel sad


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->