சிக்கலில் நாடு! 3 அமைச்சர்கள் ராஜினாமா?! - Seithipunal
Seithipunal


கடந்த 4-ந்தேதி லெபனான் நாட்டின் துறைமுக நகரும், தலைநகருமான பெய்ரூட்டில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த குண்டுவெடிப்பின் விளைவாக அந்த குடோன் அமைந்திருந்த கட்டடம் உட்பட அதன் அருகில் அமைந்திருந்த கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. 15 கிலோ மீட்டர் தூரம் வரை இந்த குண்டு வெடிப்பின் அதிர்வுகள் உணரப்பட்டது.

இந்த விபத்தில் 135-க்கும் மேற்பட்ட பேர் உயிரிழந்து உள்ளனர். சுமார் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்தது உள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் துறைமுக கிடங்கில் 6 ஆண்டுகளாக வைத்திருந்த 2 ஆயிரத்து 750 டன் அமோனியம் நைட்ரேட் என்ற வெடிமருந்து வெடித்ததே என்று லெபனான் அதிபர் மைக்கேல் அவுன் கூறியுள்ளார்.
 
அரசின் அலட்சியத்தால் தான் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறி அந்நாட்டு  மக்கள் போராட்டத்தில் இறங்கினர். மேலும், அதிபர் மைக்கேல் அவுன் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். 

போராட்டத்தின் விளைவாக, அந்நாட்டு தகவல் தொடர்பு மந்திரி மனால் அப்தெல் சமாத், சுற்றுச்சூழல் மந்திரி டமியானோஸ் கட்டார் உள்ளிட்ட 9 பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியில் இருந்து விலகினர்.

இந்நிலையில் நீதித்துறை மந்திரி மரி கிளாட் நஜ்ம் தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளார். மூன்று அமைச்சர்கள் பதவி விலகியுள்ளதால் அந்நாட்டு அதிபருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lebanon justice minister resign


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->