சட்டப்பூர்வமானது கஞ்சா பயன்பாடு!. அனுமதியளித்தது நாடாளுமன்றம்!. கொந்தளித்த தமிழ் மக்கள்!. - Seithipunal
Seithipunal


இந்தியா உள்பட பல நாடுகளில் போதைப்பொருள்களில் ஒன்றான கஞ்சா பயன்பாட்டுக்கு தடை உள்ளது. கஞ்சா செடிகளை பயிரிடுவது மற்றும் அதனை பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும்.

அந்த வகையில் கனடாவில் கஞ்சா வைத்திருப்பது மற்றும் பயன்படுத்துவது குற்றச்செயல் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த 2001–ம் ஆண்டு மருத்துவ காரணங்களுக்காக கஞ்சாவை பயன்படுத்த அரசு அனுமதி வழங்கியது.

அதே சமயம் அதனை போதைப்பொருளாக பயன்படுத்துவதற்கு தடை விதித்திருந்தது. ஆனாலும் சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வந்தது. எனவே அங்கு கஞ்சா பயன்பாட்டுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கக்கோரி கோரிக்கைகள் வலுத்தன. 

கஞ்சா பயிரிட்டு விற்பனை செய்யவும், வாங்கிப் பயன்படுத்தவும் சட்டப்பூர்வ அனுமதியளிக்கும் மசோதா, கனடா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்த அறிவிப்பின்படி கனடா வாழ் தமிழ் மக்கள் கூறுகையியல் அரசே இப்படி செய்கிறார்கள், என்ன சொல்வது? முக்கியமாகச் சிறுவர்களும், இளைஞர்களும் கெட்டு போய்விடுவார்கள். கஞ்சா உடலுக்கும், மனதிற்கும் நல்லதல்ல. மேலும், அந்த நாற்றத்தைத் தாங்க முடியாது என்று கூறுகின்றனர்.

மேலும் அங்குள்ள தமிழ் மக்கள் கூறுகையில் இளைஞர்களால் இதை எந்த அளவில் நிறுத்த வேண்டும் என்று அனுமானிப்பது கடினம். குறுகிய மற்றும் நீண்ட நாள் விளைவுகளைப் பற்றி படிக்கும் போது மார்பு நோய்கள் மற்றும் புற்றுநோய் வருவதற்கும் மிக அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன இதை நினைத்தாலே பயமாக உள்ளது என கூறுகின்றனர்.

உலகிலேயே, உருகுவே நாட்டுக்கு பிறகு கஞ்சா பயன்பாட்டை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கும் 2–வது நாடு கனடா என்பது குறிப்பிடத்தக்கது.



கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ அவரது ட்வீட்டர் பக்கத்தில் “நம் சிறுவர்களுக்கு சுலபமாக கஞ்சா கிடைத்துவந்தது. இதன் மூலம் குற்றவாளிகள் பெரும் பணம் சம்பாதித்து வந்தார்கள். அதை நாம் இன்று மாற்றியுள்ளோம். ” என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

lawful use of kanja Authorization has been granted.


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->