உலகமே பயன்படுத்தும் கட், காப்பி, பேஸ்ட் கண்டுபிடித்த விஞ்ஞானி மறைந்தார்!  - Seithipunal
Seithipunal


கம்பியூட்டரில் அதிகம் பயன்படுத்தப்படும் முக்கியமானவைகளில் ஒன்று கட், காப்பி, பேஸ்ட். இந்த வசதியைக் கண்டுபிடித்த 74 வயதான விஞ்ஞானி லேரி டெஸ்லர் காலமானார்.

நியூயார்க் நகரில் 1945 ஆம் ஆண்டு பிறந்தவர் லேரி. கணிணி அறிவியல் பட்டப்படிப்பை ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் முடித்தார். ஜெராக்ஸ் பாலோ ஆல்டோ ஆய்வு மையத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது 1973 ஆம் ஆண்டு,  இந்த கட், காப்பி, பேஸ்ட் என்ற வசதியை லேரி கண்டுபிடித்தார். ஜெராக்ஸ் பாலோ ஆல்டோ ஆய்வு  மையம் நாம் தற்போது கணிணிகளில் பயன்படுத்தும் விண்டோஸ் உள்ளிட்ட வரைகலை சூழல் இயங்குதள பயன்பாட்டைப் பற்றியும், அதை மவுஸ் என்ற கருவியைக் கொண்டு எப்படி உபயோகிப்பது என்பது பற்றியும் ஆரம்ப கால ஆய்வுகளை செய்தது.

லேரி டெஸ்லர் 1980 முதல் 1997 ஆம் ஆண்டு வரை ஆப்பிள் நிறுவனத்தில் பணிபுரிந்தார். மகிண்டாஷ், குயிக்டைம், லிஸா, நியூடன் டேப்ளட் உள்ளிட்டவற்றின் உருவாக்கத்தில் லேரியின் பங்களிப்பும் இருந்தது. ஆப்பிள் நிறுவனத்தில் தலைமை விஞ்ஞானியாக 1993 ஆம் ஆண்டு பதவி உயர்வு பெற்றார். 

ஸ்டேஜ்காஸ்ட் என்ற நிறுவனத்தில் லேரி பின்னாட்களில் சேர்ந்து பணியாற்றினார். இந்த நிறுவனம் ஆப்பிளில் இருந்து பிரிந்த நிறுவனம் ஆகும். இவர் யுஎக்ஸ் கன்சல்டன்ஸி என்ற நிறுவனத்தை கலிபோர்னியாவில் 2009-ல் தொடங்கினார். அமேசான் மற்றும் யாஹூ உள்ளிட்ட பெரிய நிறுவனங்களில் லேரி டெஸ்லர் பணிபுரிந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Larry tesler passed away


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->