ஊரடங்கை மீறி தேரோட்ட முயற்சி.. மக்கள் - காவல்துறை மோதல்.!! - Seithipunal
Seithipunal


நேபாள நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, மக்கள் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் பொதுஇடங்களில் கூடவும், சமூக நிகழ்ச்சிகளை நடத்தவும் தடை விதிக்கப்பட்டது. 

இந்த நிலையில், காத்மாண்டு பள்ளத்தாக்கில் இருக்கும் லலித்பூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி மசீந்திரநாத் ஜாத்ரா தேரோட்டம் நடைபெற இருந்தது. இந்த தேரோட்டத்தை மக்கள் நடத்திவிட வேண்டும் என்ற முனைப்பில் இருந்தனர். 

இதனை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையில், மக்களுக்கும் - காவல் துறையினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் காவல் அதிகாரிகள் மீது மக்கள் தாக்குதல் நடத்தவே, ஆயுதம் தாங்கிய காவல் துறையினர் மக்களை கட்டுப்படுத்த கண்ணீர் புகைக்குண்டுகளை வீச துவங்கியதால் அப்பகுதி போர்க்களம் போல காட்சியளித்தது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kathmandu Protest peoples - police fight


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->