ஒட்டக பாலில் சோப் தயாரிப்பு விற்பனை செய்யும் பெண்மணி..! - Seithipunal
Seithipunal


நடிகர் வடிவேலு பார்த்தீபனுடன் நடித்த திரைப்படத்தில், தனக்கு ஒட்டக பாலில் தேநீர் வேண்டும் என்று கேட்டு அடம் பிடிப்பார். மேலும், தான் சவூதி அரேபியாவில் பணியாற்றி வந்தவன் என்பதால், அங்கு ஓட்டக பாலில் டீ போடுகிறார்கள், நீயும் ஒட்டக பாலில் டீ போடு என்று கேட்டு அட்டகாசம் செய்வார். 

இது தொடர்பான திரைப்பட காமெடிகள் நம்மில் பலருக்கும் இன்றளவு சிரிப்பை ஏற்படுத்தும். இந்நிலையில், ஓட்டக பாலில் இருந்து சோப் தயாரிக்கும் முறைகள் குறித்து உங்களுக்கு தெரியுமா?. கேட்கவே ஆச்சரியமாக உள்ளதா?. ஆம் பெண் ஒருவர் ஒட்டக பாலில் சோப்பு தயாரித்து விற்பனை செய்கிறார். 

ஜோர்டானியாவை (Jordan) சார்ந்த பெண்மணி லாரா அல் திட்டி (Lara al-Titi). இவர் ஒட்டக பால் மூலமாக நறுமணம் மிக்க வாசனை பொருட்களை கலந்து சோப்பு தயாரித்து விற்பனை செய்கிறார். இந்த ஒட்டக பால் சோப் உள்ளூர் மக்களாலால் விரும்பப்படுவதாகவும் அவர் தெரிவிக்கிறார். 

மேலும், ஒட்டக பால் மூலமாக மாதத்திற்கு 4000 சோப்புகள் தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும், ஒட்டக பாலுடன் சோப்பு கலவைகள் தயார் செய்யப்பட்டு, அவற்றில் நறுமணத்திற்காகவும், நிறத்திற்க்காகவும் தனித்தனியாக வேதிப்பொருட்களை கலந்து விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கிறார். 

சாதா பாலில் டீ, காபி, பாயசம், பால்கோவா, பால் ஹல்வா என்று விதவிதமாக சாப்பிட்டு இருப்போம். ஒட்டக பாலில் சோப்பு தயாரித்து விற்பனை செய்வது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தலாம். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jordan Woman Lara al Titi Prepare Camel Milk Soap 18 June 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->